Women’s Health is Family Health: A Guide to Wellbeing
This blog highlights the importance of women’s physical, mental, and social wellbeing. Learn about health awareness and self-care strategies related to PCOS, breast and cervical health, menstrual issues, and more.

பெண் நலமே குடும்ப நலம்: ஆரோக்கிய வாழ்கை

பெண்களின் ஆரோக்கியம் என்பது நோய்கள் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல, அது உடல், மன மற்றும் சமூக நலன்களின் முழுமையான சமநிலையாகும். ஒவ்வொரு பெண்ணும் தன் சுகாதாரத்துக்கு முதலிடம் கொடுப்பது அவசியம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிர் நலவாழ்வு மருத்துவத் துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் டாக்டர் சத்யா சுதாகர் அவர்களுடனான ஓர் உரையாடலில் இருந்து சில பகுதிகள்…

‘‘அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்! பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது என்பது மனிதகுலத்துக்கே  அதிகாரம் அளிப்பதாகும்.

சர்வதேச மகளிர் தினத்தின் இந்த ஆண்டின் கருப்பொருள் ‘செயலைத் துரிதப்படுத்துங்கள்’ என்பதுதான். ஆம்… வாக்குறுதிகளை முன்னேற்றமாக மாற்றுவதற்கான நேரம் இது. முன்னேறுவோம்! நிலைத்த எதிர்காலத்துக்கான முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவோம்!” என வாழ்த்துச் செய்தியோடு தொடங்கி, பெண்கள் சுகாதார விழிப்புணர்வில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்துத் தொடர்கிறார்.

‘‘பெண்கள் சுகாதார விழிப்புணர்வு இன்றைய நாள் வரை பல சவால்களை சந்தித்து வந்துள்ளது’’ என்று டாக்டர் சத்யா விளக்குகிறார். ‘‘கிராமப்புறப் பெண்களுக்கு சுகாதார சேவைகளுக்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருந்தது. பெண்கள் தங்கள் குடும்பத்தை முன்னுரிமைப்படுத்தி, தங்கள் சொந்த ஆரோக்கியத்தை புறக்கணிப்பது ஒரு பெரிய பிரச்னை. மேலும், சில சமூகங்களில் சுகாதாரக் கல்வியின் பற்றாக்குறை காரணமாக அவமான எண்ணம் மற்றும் தவறான நம்பிக்கைகள் நிலவின, இவை பெண்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதித்தன.

இப்போது நிலைமை வேகமாக மாறி வருகிறது. முன்னேற்றமடைந்த பரிசோதனைக் கருவிகள், சுகாதாரக் கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றால் பெண்கள் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது’’ என்கிறார் டாக்டர் சத்யா.

நமது பகுதியில் பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய சுகாதாரப் பிரச்னைகளைப் பட்டியலிடும் டாக்டர் சத்யா, ‘உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், இனப்பெருக்க சுகாதார பிரச்னைகள், புற்றுநோய்கள் – குறிப்பாக மார்பகம், கர்ப்பப்பை வாய், எண்டோமெட்ரியம் மற்றும் அண்டகம், PCOS, மாதவிடாய் பிரச்னைகள் மற்றும் மன ஆரோக்கிய கவலைகள் ஆகியவை தற்போதைய முக்கிய அச்சுறுத்தல்கள்’’ என்கிறார்.

PCOS என்ற பாலிசிஸ்டிக் ஒவேரியன் சிண்ட்ரோம் இளம் பெண்களிடையே அதிகரித்து வருவதற்கான காரணங்களை விளக்கிய டாக்டர் சத்யா, ‘‘இதற்குப் பல காரணிகள் பங்களிக்கின்றன. குழந்தைப் பருவ உடல் பருமன், போதுமான உடல் செயல்பாடு இல்லாமை, துரித உணவுகளை அதிகமாக உட்கொள்ளல், ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றாமை, வளரூம் பருவத்தில் ஏற்படும் மன அழுத்தம், தூக்கக் கோளாறுகள் ஆகியவை முக்கிய காரணங்கள்’’ என்று குறிப்பிடுகிறார்.

‘‘PCOS-ஐத் தடுக்கவும் நிர்வகிக்கவும், வாழ்க்கைமுறை மாற்றங்கள் மிகவும் அவசியம். இதற்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் மிக அவசியம்’’ என்று டாக்டர் சத்யா வலியுறுத்துகிறார். அவர் பரிந்துரைக்கும் முக்கிய வழிமுறைகள்:

இவற்றையெல்லாம் முறையாகச் செய்ய குடும்பத்தினரின் ஆதரவு மிக அவசியம்.

‘‘ஒவ்வொரு பெண்ணும் தன் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க சில அடிப்படைப் பழக்கங்களை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும்’’ என்று டாக்டர் சத்யா அறிவுறுத்துகிறார்.

பணிச்சுமை மற்றும் குடும்பப் பொறுப்புகளை சமாளிக்கும் பணிபுரியும் பெண்களுக்கு, டாக்டர் சத்யா அன்பான பரிந்துரைகளை வழங்குகிறார்:

‘‘உங்களை நீங்களே  கவனித்துக் கொள்வதற்கு (self care) முன்னுரிமை கொடுங்கள். நாம் எப்போதும் குடும்பத்தைக் கவனித்துக் கொள்வதில் மும்முரமாக இருக்கிறோம், ஆனால், உங்கள் ஆரோக்கியத்துக்கும் நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவு, போதுமான தூக்கம், வழக்கமான உடற்பயிற்சி ஆகியவற்றை உங்கள் அன்றாட வாழ்வின் முன்னுரிமைகளாக மாற்றுங்கள்.

நேர மேலாண்மைத் திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வேலை, ஓய்வு, குடும்பம் மற்றும் சுய பராமரிப்புக்கு இடையே சமநிலை அவசியம். உங்கள் நாளை திட்டமிடும்போது, உங்களுக்கான நேரத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பணியிடத்தில் ஒரு நல்ல ஆதரவு வலையமைப்பை உருவாக்குங்கள். சக ஊழியர்களுடன் நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்வது உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகளை தவறவிடாதீர்கள். பணிச்சுமை காரணமாக இவற்றை தள்ளிப்போடுவதையும் தவிர்க்கவும். உங்கள் ஆரோக்கியமே உங்கள் செயல்திறனின் அடித்தளம்.

உதவியை நாடத் தயங்காதீர்கள். பல பெரிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மன நல ஆலோசனை சேவைகளை வழங்குகின்றன. தேவைப்படும்போது இந்த வளங்களைப் பயன்படுத்துங்கள்.’’

‘‘கர்ப்ப கால பராமரிப்பில் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன’’ என்று டாக்டர் சத்யா உற்சாகத்துடன் பகிர்கிறார்.

‘‘இப்போது கர்ப்பிணிகளுக்கு நெருக்கமான கண்காணிப்பு மற்றும் பல்துறை மருத்துவர்களின் கூட்டுப் பராமரிப்பு கிடைக்கிறது. உயர் ஆபத்துள்ள கர்ப்பங்கள் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.’’

‘‘ஆரோக்கியமான கர்ப்பத்தை இலக்காகக் கொள்ளுங்கள். கர்ப்பமாவதற்கு முன்பே ஆரோக்கியமான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, ஃபோலிக் அமிலம் உட்கொள்ளல் போன்றவற்றைத் தொடங்குவது சிறந்தது. கர்ப்ப காலத்தில் உங்கள் மருத்துவருடன் திறந்த உரையாடல் கொள்ளுங்கள். கர்ப்பம் மற்றும் பிரசவம் தொடர்பான உங்கள் அனைத்துக் கேள்விகளையும், கவலைகளையும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

‘‘ஆரம்ப வயதில் HPV தடுப்பூசி மிகவும் பயனுள்ளது. 9-14 வயது வரையுள்ள இளம் பெண்களுக்கு 2 டோஸ்களும், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 3 டோஸ்களும் பரிந்துரைக்கப்படுகின்றன.

இனப்பெருக்க சுகாதாரத்தை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். சுகாதாரமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது தொற்றுநோய்களைத் தடுக்க உதவும்.

பாதுகாப்பான பாலியல் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது முக்கியம். பல துணைகளைத் தவிர்ப்பது மற்றும் ஆணுறை போன்ற பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துவது HPV தொற்றைத் தடுக்க உதவும்.

வழக்கமான பரிசோதனைகள் ஆரம்ப நிலையில் மாற்றங்களைக் கண்டறிய உதவும். பாப் ஸ்மியர் மற்றும் HPV பரிசோதனைகள் மூலம் கருப்பை வாய் மாற்றங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும்.

பாலியல் கல்வி மிகவும் அவசியம். சரியான பாலியல் கல்வி மூலம் இளைஞர்கள் பாதுகாப்பான பழக்கவழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்…’’

‘‘3D மற்றும் 4D அல்ட்ராசவுண்ட் போன்ற மேம்பட்ட இமேஜிங் தொழில்நுட்பங்கள் தற்போது கிடைக்கின்றன. இவை கருவின் வளர்ச்சியை துல்லியமாக கண்காணிக்க உதவுகின்றன.

ரோபோட்டிக் உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைகள் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

லேப்ரோஸ்கோபிக் மற்றும் ஹிஸ்டெரோஸ்கோபிக் சிகிச்சைகள் மிகவும் புகழ்பெற்றவை. இந்த சிறிய துளை அறுவை சிகிச்சைகள் குறைந்த வலி, விரைவான குணமடைதல் மற்றும் குறைந்த தழும்புகளை ஏற்படுத்துகின்றன.

கர்ப்ப காலத்தில் கருவில் செய்யப்படும் சிகிச்சைகள் இப்போது சாத்தியமாகியுள்ளன.

மரபணு ஆய்வில் முன்னேற்றங்கள் ஆரம்ப கர்ப்ப காலத்திலேயே மரபணு குறைபாடுகளை கண்டறிய உதவுகின்றன.

கரு உட்கதிர்வீச்சு கண்காணிப்பு மற்றும் டெலிமெடிசின் போன்ற தொழில்நுட்பங்கள் கர்ப்பிணிகளுக்கு சிறந்த பராமரிப்பை வழங்குகின்றன…’’

பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என்பது அவர்களைச் சுற்றியுள்ள அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். நாம் ஒவ்வொருவரும் பெண்கள் ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நம் சமூக அமைப்புகளை மாற்ற வேண்டும்.

ஆரோக்கியமான பெண்கள் மட்டுமே ஆரோக்கியமான குடும்பங்களையும், ஆரோக்கியமான சமூகத்தையும் உருவாக்க முடியும். எனவே, பெண்கள் சுகாதாரத்தில் முதலீடு செய்வது என்பது நமது எதிர்காலத்தில் முதலீடு செய்வதாகும்.

சமூகம் பெண்கள் தொடர்பான விஷயங்களில் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான குடும்பத்திற்கு ஆரோக்கியமான பெண்கள் அவசியம்.

பெண்களின் ஆரோக்கியத்துக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் பெண்கள் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக முன்னேற குடும்ப ஆதரவு அவசியம்.

நினைவில் கொள்ளுங்கள்… ஆரோக்கியமான சமூகத்துக்கு ஆரோக்கியமான பெண்கள் அவசியம்!

ஆம்… பெண் நலமே குடும்ப நலம்!

(தொடர்ந்து பேசுவோம்…)

Dr. P. சத்யா சுதாகர் MBBS, DGO, DRM(Germany)
மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவ நிபுணர்
காவேரி மருத்துவமனை, சேலம்

பெண்கள் தங்களது உடல்நலத்தை புறக்கணிக்கிறார்களா?
பல பெண்கள் குடும்பம், வேலை மற்றும் சமூக பொறுப்புகளில் முழுமையாக ஈடுபடுவதால், தங்களுக்காக நேரம் எடுத்துக்கொள்ள மறந்து விடுகிறார்கள். இதனால், உடல் மற்றும் மன நலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பெண்கள் தங்களது உடல்நலத்தை பராமரிக்க என்ன செய்ய வேண்டும்?

குடும்ப நலத்திற்கும் பெண்களின் உடல்நலத்திற்கும் என்ன தொடர்பு?
பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால், அவர்கள் குடும்பத்தின் நலனுக்கும், மகிழ்ச்சிக்கும், ஒருங்கிணைப்பிற்கும் ஆதாரமாக செயல்பட முடியும். ஒரு பெண்ணின் நலமே குடும்பத்தின் நலத்துக்கு அடித்தளமாகும்.

எந்த நேரத்தில் பெண்கள் மருத்துவரை அணுக வேண்டும்?

பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்:

பெண்களுக்கான அவசியமான பரிசோதனைகள் எவை?

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Women’s Health is Family Health: A Guide to Wellbeing
disclaimer

What's your reaction?

Comments

https://timessquarereporter.com/public/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!

Facebook Conversations