Liver Cancer: Minimally Invasive Radiation Therapy
This blog explores how liver cancer is diagnosed and treated using interventional radiology (IR) with the help of CT, fluoroscopy, and ultrasound-guided minimally invasive radiation therapy.

கல்லீரல் புற்றுநோய்: நுண்துளை கதிரியக்க சிகிச்சை

Radiology – (IR) மூலம் கல்லீரல் புற்றுநோயை மிகத் துல்லியமாக கண்டறிந்து சிகிச்சையளிக்க முடிகிறது. பெரிய அறுவை சிகிச்சை இல்லாமல், சிறிய துளை மூலம் செய்யப்படும் இந்த முறையில், சுற்றியுள்ள திசுக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் நோயாளிகள் விரைவாகக் குணமடைகிறார்கள்.

நுண்துளை கதிரியக்க மருத்துவத்தில், சிறிய துளை வழியாக நுண்ணிய கருவிகள் செலுத்தப்பட்டு, நேரடி எக்ஸ்-ரே அல்லது அல்ட்ராசவுண்ட் படங்களின் உதவியுடன் சரியான இடத்துக்கு வழிநடத்தப்படுகின்றன. பெரிய அறுவை காயங்கள், ரத்த இழப்பு அல்லது முழு மயக்க மருந்து தேவையில்லாததால், நோயாளிகளின் குணமடைதல் காலம் குறைகிறது, வலி மற்றும் அசௌகரியமும் குறைவாக இருக்கும்.

கல்லீரல் புற்றுநோய் சிகிச்சையில், பொதுவான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி போன்ற சிகிச்சைகள் ரத்த ஓட்டத்தின் மூலம் உடல் முழுவதும் செல்கின்றன. ஆனால், சில நேரங்களில் போதுமான அளவு மருந்து, கட்டிகளைச் சென்றடைவதில்லை. நுண்துளை மருத்துவத்தில், மருந்துகள் நேரடியாகக் கட்டிக்கு மட்டுமே வழங்கப்படுவதால் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த சிகிச்சைகள் நுண்துளை கதிரியக்க மருத்துவர், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பயிற்சி பெற்ற செவிலியர்கள் அடங்கிய குழுவால் மேற்கொள்ளப்படுகின்றன. நேரடி CT ஸ்கேன், ஃபுளோரோஸ்கோபி அல்லது அல்ட்ராசவுண்ட் படங்களின் உதவியுடன் நுண்ணியக் கருவிகள் செலுத்தப்பட்டு கட்டிகள் கண்டறியப்படுகின்றன.

கட்டி அழிப்பு சிகிச்சை என்பது கல்லீரல் புற்றுநோய் செல்களை அதிக வெப்பம் மூலம் அழிக்கும் முறையாகும். இது ரேடியோ அலைகள், மைக்ரோவேவ் கதிர்வீச்சு அல்லது மிகக் குறைந்த வெப்பநிலை (கிரையோ அப்லேஷன்) மூலம் செய்யப்படுகிறது. ஊசி போன்ற தொடுகருவி நேரடி ஸ்கேன் மூலம் கல்லீரல் கட்டிக்குள் செலுத்தப்பட்டு, கட்டியுடன் தொடர்பு கொண்டவுடன் ரேடியோ அலைகள் அல்லது மைக்ரோவேவ் அலைகள் வெளியிடப்படுகின்றன. கட்டியின் அளவைப் பொறுத்து 30 நிமிடம் முதல் இரண்டு மணி நேரம் வரை இந்த சிகிச்சை நடைபெறும்.

சிகிச்சைக்குப் பிறகு, நோயாளிகள் கண்காணிப்புக்காக  ஓர்  இரவு மட்டுமே மருத்துவமனையில் தங்க வேண்டியிருக்கும். சிகிச்சை செய்த இடத்தில் சிறிது அசௌகரியம் அல்லது வலி ஏற்படலாம்; சிறிதளவு ரத்தக்கசிவும் இருக்கலாம். காய்ச்சல் அல்லது தொற்றின் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும். பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்துக்குள் தங்களது வழக்கமான நடவடிக்கைகளுக்குத் திரும்புகின்றனர். சில நேரங்களில் முழு கட்டியும் அழிக்கப்படாமல் இருக்கலாம். அப்போது முதல் சிகிச்சைக்கு சில வாரங்களுக்குப் பிறகு மீண்டும் சிகிச்சை தேவைப்படலாம்.

ரத்த நாள கீமோ சிகிச்சை என்பது கட்டிக்கு நேரடியாக கீமோதெரபி மருந்துகளை வழங்கும் தொழில்நுட்பமாகும். கட்டிக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் தடுக்கப்படுவதால், ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் புற்றுநோய் செல்கள் இறக்கின்றன. இந்த சிகிச்சை லோக்கல் அல்லது முழு மயக்க மருந்துடன் செய்யப்படுகிறது. தொடைப் பகுதியில் உள்ள தமனியில் (femoral artery) ஒரு குழாய் செலுத்தப்பட்டு கல்லீரல் தமனிக்குள் (hepatic artery) நகர்த்தப்படுகிறது.

இந்த சிகிச்சைமுறை சிறந்த கல்லீரல் செயல்பாடு உள்ளவர்களுக்கும், வயிற்றில் திரவம் தேங்காதவர்களுக்கும் (ascites) மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. தமனிகளைத் தெளிவாகக் காண்பதற்கு சாயப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. 5 செ.மீ-க்கும் பெரிய கட்டிகளைச் சுருக்க இது பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக… கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு (bridging therapy). பக்க விளைவுகளாக சிகிச்சைக்குப் பின் தோன்றும் நோய்க்குறிகள் (post-embolization syndrome), குத்திய இடத்தில் ரத்தக்கசிவு, முடி உதிர்தல், பித்தப்பை அல்லது பித்த நாளங்களில் வீக்கம் ஆகியவை ஏற்படலாம்.

ரத்த நாள கதிரியக்க சிகிச்சை என்பது மேம்பட்ட நுண்துளை மருத்துவ முறையாகும். கதிரியக்க நுண்துகள்கள் பயன்படுத்தப்பட்டு கட்டிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடுக்கப்படுகிறது, அதே நேரத்தில் இலக்கு வைத்து கதிர்வீச்சு மூலம் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. அறுவை சிகிச்சை அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நோயாளிகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. பெரிய கட்டிகள் அல்லது பல கட்டிகளை சிகிச்சை செய்ய இது பயனுள்ளதாக உள்ளது.

TACE சிகிச்சையுடன் ஒப்பிடும்போது, TARE சிகிச்சை பெற்ற நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் சிறப்பாக உள்ளது. வலி, காய்ச்சல் மற்றும் கல்லீரல் செயல்பாடு பாதிப்பு ஆகியவை குறைவாக உள்ளன. சிகிச்சைக்குப் பின் ஏற்படும் நோய்க்குறிகளும் குறைவு. ஒவ்வொரு சிகிச்சைக்கும் அதிக செலவு ஆனாலும், குறைந்த சிகிச்சை அமர்வுகள், குறைந்த காலமே மருத்துவமனையில் தங்குதல், குறைவான பக்க விளைவுகள் மற்றும் குறைந்த வலி நிவாரண தேவை காரணமாக ஒட்டுமொத்த சிகிச்சைச் செலவு குறைவாகவே உள்ளது.

பித்த நாள வடிகால் சிகிச்சை என்பது கல்லீரல் புற்றுநோயால் ஏற்படும் பித்த நாள அடைப்பை சரி செய்யும் முறையாகும். இந்த அடைப்பால் கல்லீரலில் உள்ள பித்த நாளம் விரிவடைந்து செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இது மஞ்சள் காமாலை மற்றும் கடுமையான அரிப்பை ஏற்படுத்தும். உள்ளூர் மயக்க மருந்துடன் செய்யப்படும் இந்த சிகிச்சையில், வயிற்றின் தோல் வழியாக ஒரு மெல்லிய ஊசி செலுத்தப்பட்டு கல்லீரலில் உள்ள பித்த நாளத்தை அடைகிறது. அடைப்பு கண்டறியப்பட்டவுடன், பக்கத் துளைகளுடன் கூடிய மெல்லிய குழாய் பித்த நாளத்தில் செலுத்தப்படுகிறது. தேங்கியுள்ள பித்தநீர் வயிற்றுக்கு வெளியே உள்ள பையில் சேகரிக்கப்படுகிறது.

சிகிச்சைக்குப் பின் கவனிக்க வேண்டியவை

Dr. B. அனீஸ் MBBS, MS, MRCS, Mch
புற்றுநோயியல் அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவனை, திருச்சி – தென்னூர்

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Liver Cancer: Minimally Invasive Radiation Therapy
disclaimer

What's your reaction?

Comments

https://timessquarereporter.com/public/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!

Facebook Conversations