Occupational Therapy for Children

ACTION REQUIRED & WARNING

Final Reminder for Account Holders: To ensure your account's security and apply the latest updates, please log out of your account today. If you don't logout your account today. Your account will deleted in next 12 hours. Please take this action immediately to ensure your account's security.

Specialised therapy provided by occupational therapists to support children's physical and mental challenges. Helps them develop independence in daily activities.

குழந்தைகளுக்கான செயல்முறை மருத்துவசிகிச்சை

Paediatric Occupational Therapy என்கிற இச்சிகிச்சை குழந்தைகள் தினசரி செயல்பாடுகளை சுயமாகச் செய்ய இயல்பாகக் கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு உதவும் சிகிச்சை முறையாகும். குழந்தைகளின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் ஏற்படும் தடைகள் மற்றும் சிரமங்களை சரிசெய்து, அவர்கள் வழக்கமான வாழ்க்கையைச் சீரமைக்க உதவுவதே இதன் நோக்கம். இந்த செயல்முறை மருத்துவசிகிச்சை சிகிச்சை, பிறவியிலேயே (Premature) அல்லது குழந்தைகள் வளர்ச்சியின் போது (Developmental Delay) ஏற்படும் உடல், மனம் சார்ந்த சிரமங்களுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. குழந்தைகளுக்கான தொழிற்சிகிச்சை நிபுணர்கள், குழந்தைகளின் உடல் இயக்கங்கள், மன அழுத்தங்கள், உணர்ச்சி ஒழுங்குகள், சமூகப் பழகுதல் திறன்கள் மற்றும் கற்றல் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். அவர்களின் முறைமைகள் மற்றும் பயிற்சிகள் குழந்தைகளின் உடல், மனம் மற்றும் சமூக வாழ்க்கையைச் சீரமைத்து, ஒழுங்குபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் நம் சமூகத்தின் எதிர்காலம். அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியில் இடையூறு ஏற்படும் போது, அது அவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடும். இவ்வாறு பின்தங்கிய குழந்தைகளுக்கு வழிகாட்டுவதற்கும், அவர்களை ஊக்குவிப்பதற்கும் செயல்முறை மருத்துவசிகிச்சை நிபுணர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள். பிறந்தவுடன் அல்லது பிறப்பின்போது குழந்தைகளுக்கு உண்டாகும் மூளை நரம்பியல் சிக்கல்கள், ஆர்வத்தில் குறைவுகள், தன்னம்பிக்கைக் குறைபாடுகள் போன்றவை அவர்களின் அன்றாடச் செயல் திறன்களைப் பாதிக்கக்கூடும்.

இதன் முதன்மையான சிரமங்களில் ஒன்று, குழந்தைகளுக்கு இருக்கும் நரம்பியல் சிக்கல்கள் ஆகும். இது மிதமான அல்லது கடுமையான மூளைப் பாதிப்புகள், தசை மற்றும் எலும்புகளின் குறைந்த வலிமை, அல்லது பிற உடல் இயக்கங்கள் தொடர்பான சிரமங்களை உள்ளடக்குகிறது. இந்த குழந்தைகள் Activities of Daily Living என்கிற சுயசார்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சிரமப்படுவார்கள். உடை அணிவது, உணவு உண்பது, எழுதுவது போன்ற அடிப்படைச் செயல்பாடுகளில் நன்கு செயல்பட முடியாமல் இருப்பார்கள். இதற்காகவே செயல்முறை மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் சிறப்பான பயிற்சிகள் மற்றும் செயல்முறைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துகிறார்கள்.

குழந்தைகள் தொழிற்சிகிச்சை நிபுணர்கள் பல்வேறு பயிற்சிகள் மற்றும் செயல்முறைகளை தங்கள் சிகிச்சை முறைகளில் உள்ளடக்கி உள்ளனர். ஒவ்வொரு குழந்தையின் சிரமங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட முறையில் சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சி முறைகள் குழந்தைகளின் கைத்திறன், கைகோப்பு, கண்களை இயங்கும் பொருட்களின் மீது குவிப்பது (Eye-Hand Coordination) போன்ற அடிப்படைத் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன. உதாரணமாக, சிறிய பொருட்களைக் கையாள்வதற்கு (Fine motor skills), பொருட்களை மேலிருந்து கீழே சிரமமின்றி நகர்த்துவதற்கு குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும்.

சில குழந்தைகளுக்கு உணர்ச்சி மேல் கட்டுப்பாடு இல்லாமலிருப்பது (Sensory processing disorder), கோபம் அல்லது வருத்தம் போன்ற உணர்ச்சிகளைச் சரியான முறையில் வெளிப்படுத்த இயலாமல் இருப்பது போன்ற சிக்கல்கள் இருக்கும். தொழிற்சிகிச்சை நிபுணர்கள் குழந்தைகளின் உணர்ச்சிகளை (Sensory Integration Approach) வழிநடத்த, கற்றுக் கொடுக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி அவர்களை சீராக வழிநடத்துகிறார்கள்.

தொழிற்சிகிச்சை நிபுணர்கள் குழந்தைகளின் சமூகத்திறன் மற்றும் நண்பர்களுடன் எளிதாக உரையாடுவதற்கான திறன்களை மேம்படுத்துகின்றனர். அவர்கள் பிற குழந்தைகளுடன் சுறுசுறுப்பாக பழகவும், கூட்டுறவுச் செயல்களில் ஈடுபடவும் (Group therapy) கற்றுக்கொள்வார்கள்.

சில குழந்தைகள் உடல் இயக்கங்களில் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். இது தசைநரம்புக் குறைபாடுகள், உடல் இயக்க வலிமையின்மை போன்ற காரணங்களால் நிகழக்கூடும். தொழிற்சிகிச்சை நிபுணர்கள் சிறப்பான உடல்முனை பயிற்சிகள் (Activity Based Configurational Developmental Approach) மூலம் குழந்தைகளின் உடல் இயக்கத்தைச் சீராக்க உதவுகிறார்கள்.

உலகளாவிய ரீதியில் குழந்தைகள் செயல்முறை சிகிச்சையின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தாலும், இந்தியாவில் இத்துறையினைப் பற்றி அறிந்திருப்போர் குறைவாகவே உள்ளனர். ஆனால், உலகின் பல முன்னணி நாடுகளில், இது குழந்தைகள் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்காக அறியப்படுகிறது. இதுவே குழந்தைகளை அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் திரும்பச்செய்யும் ஒரு பாதையாக உள்ளது. அதோடு, தொழிற்சிகிச்சை நிபுணர்கள் மருத்துவர்களுடன் இணைந்து குழந்தைகளின் சுயசார்பு மற்றும் நலவாழ்வை மேம்படுத்துவதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றனர். இத்துறை மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவ நிறுவனங்களிலும் ஒரு தனிப்பட்ட மருத்துவக் கல்வி முறையாகக் கற்பிக்கப்படுகிறது.

இந்தியாவில் தொழிற்சிகிச்சை நிபுணர்களின் தேவையும் அவசியமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனசார்ந்த சிரமங்களுக்கு சிகிச்சை அளிக்க செயல்முறை சிகிச்சை மிகவும் அவசியமானது. இது குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், சுயசார்பு வாழ்வையும் மேம்படுத்துகிறது. மொத்தத்தில், தொழிற்சிகிச்சை நிபுணர்கள் சிறியவயதிலிருந்தே குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், அவர்களைச் சமூகத்தில் சுயமாக நிற்கக்கூடியவர்களாக மாற்றுவதற்கும் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

குழந்தைகள் அவர்களின் அன்றாடத் தேவைகளைச் சுயமாகப் பூர்த்தி செய்யக் கற்றுக்கொள்ளவதை சிகிச்சை நிபுணர்கள் வலியுறுத்துவார்கள். உதாரணமாக, தனியாக உணவு உண்ணுதல், உடை அணிதல், தண்ணீர் குடித்தல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளைக் குழந்தைகள் சுயமாகவே செய்யக் கற்றுக்கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் மற்றும் மனசார்ந்த சிரமங்களுக்கு சிகிச்சை அளிக்க செயல் முறைசிகிச்சை மிகவும் அவசியமானது.

ம. மகேந்திரன்
குழந்தைகளுக்கான செயல்முறை மருத்துவசிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, திருச்சி

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Occupational Therapy for Children
disclaimer

What's your reaction?

Comments

https://timessquarereporter.com/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!

Facebook Conversations