Stroke: Awareness, Treatment, and Prevention Strategies
This blog provides detailed insights into stroke symptoms, the FAST method, diagnostic tests, emergency treatments, and prevention measures.

பக்கவாத நோய்: விழிப்புணர்வு, சிகிச்சை மற்றும் தடுப்பு வழிமுறை

நம்மில் ஆறில் ஒருவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 50 சதவிகிதம் நோயாளிகள் நிரந்தரமாகப் படுக்கை நோயாளிகளாக இருக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு நோயாளிகள் இறக்கின்றனர். இப்படி பல பேர் பாதிப்படைவதற்குக் காரணமான இந்நோயைக் கண்டறிந்து விடுபட உலக பக்கவாத நோய் எதிர்ப்பு நிறுவனம் (WSO) ஆயிரத்தில் ஒன்று எனப்படும் பிரசாரம் மூலம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

ஒவ்வொரு வருடமும் 60 லட்சம் மக்கள் பக்கவாத நோயினால் பாதிப்படைகின்றனர். மாரடைப்பு மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து நமக்குத் தெரிந்து கொண்ட அளவுக்குப் பக்கவாத நோய்த் தாக்கம் குறித்து விழிப்புணர்வு இருப்பதில்லை.

பக்கவாத நோயினால் யாரும் எந்த வயதிலும் பாதிக்கப்படலாம்.

பக்கவாதம் தாக்கியிருக்கிறது என்பதை நாம் FAST என்ற முறையில் கண்டறியலாம்.

முகம் (Face) – சிரிக்கும் போது முகத்தின் ஒரு பக்கம் கோணலாகத் தெரியும்.

கை (Arm) – ஒரு கை மரத்துப் போகக்கூடும் அல்லது செயலிழக்கும்.

பேச்சு (Speech) – பேசும் போது வாய் குழறக்கூடும்.

நேரம் (Time) – மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே நரம்பியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல  வேண்டும். இந்த அறிகுறிகள் இல்லாமல், சில நோயாளிகளுக்கு சுய நினைவின்மை, வலிப்பு நோய், விழுங்குவதில் சிரமம், தற்காலிகப் பார்வைக் கோளாறுகள் போன்றவையும் இருக்கலாம்.

இதய நோயாளிகள் சிலர் ரத்தத்தின் தடிமனை இளக்கக்கூடிய மருந்துகளை எடுத்துக் கொள்வார்கள். இவர்களுக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பலர் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் அதிகக் கொழுப்பு ஆகிய நோய்களுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்கின்றனர். இதன் காரணமாகவும் பக்கவாதம் வரலாம். புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்கள், சோம்பேறித்தனமான வாழ்க்கைமுறைகள் ஆகியவையும் பக்கவாத நோய் வருவதற்குக் காரணமாக இருக்கலாம்.

உலகிலேயே நம் நாட்டில்தான் அதிகம் பேர் பக்கவாத நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுப்பதற்கு நம்முடைய ரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் பருமனைத் தவிர்க்க வேண்டும். மது அருந்துவதையும் புகை பிடிப்பதையும் தவிர்க்க வேண்டும். சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் தகுந்த சிகிச்சை அளிப்பதன் மூலம் பக்கவாதத்தை முழுமையாகக் குணமாக்க முடியும்.

காவேரி மருத்துவமனையின் விரிவான பக்கவாத சிகிச்சை மையம் (Comprehensive Stroke Care Centre) Thrombectomy மற்றும் Thrombolysis போன்ற நவீன சிகிச்சை முறைகளை வழங்குகிறது. இதன் மூலம் உடல் பாதிப்புகள் மற்றும் பேச்சுக் கோளாறுகளைக் குணப்படுத்த முடிகிறது.

நமது காவேரி மருத்துவமனையில் தமிழ்நாட்டிலேயே பக்கவாத நோய்க்கான அதிநவீன சிகிச்சைகள் வழங்கப்படுவதால், நமது சேவையைப் பாராட்டும் விதமாக 16-வது உலக பக்கவாத காங்கிரஸ்
(16th World Stroke Congress WSC 2024) WSO Angels Diamond Award வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த விருது ஆசியா மற்றும் அரேபிய நாடுகளில் காவேரி மருத்துவமனைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது!

உலகளவில் ஆறில் ஒருவர் பக்கவாத நோயால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் 50 சதவிகிதம் பேர் நிரந்தரமான படுக்கை நோயாளிகளாக மாறுகின்றனர். ஆனால், உடனடி மருத்துவ சிகிச்சை மூலம் இந்நோயிலிருந்து முழுமையாக மீள முடியும்.

 

Dr. ஜோஸ் ஜாஸ்பர்
காவேரி மூளை மற்றும் முதுகெலும்பு மையம்
திருச்சி கண்டோண்மென்ட்

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Stroke: Awareness, Treatment, and Prevention Strategies
disclaimer

What's your reaction?

Comments

https://timessquarereporter.com/business/public/assets/images/user-avatar-s.jpg

0 comment

Write the first comment for this!

Facebook Conversations